உசிலம்பட்டி: 58 கிராம கால்வாய்க்கும் தண்ணீர் திறந்து விடக் கோரிக்கை

உசிலம்பட்டி: 58 கிராம கால்வாய்க்கும்  தண்ணீர் திறந்து விடக் கோரிக்கை
X

மதுரை மாவட்டம் வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடக்கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மாநில பொது செயலாளர் கதிரவன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உசிலம்பட்டி பகுதிக்கு ஜீவாதாரமாக இருந்து வரும் 58 கிராம் கால்வாய் வைகை அணையிலிருந்து நேரடி பாசனம் வசதி பெறும் பகுதியாகும். முல்லைப் பெரியார் பகுதியில் நல்ல மழை பெய்து வருபதால் தற்பொழுது அணையின் நீர் மட்டம் 130 அடிக்கு மேல் தண்ணீர் உயர்ந்து வருகிறது .

இதனை தொடர்ந்து வைகை அணையின் நீர்மட்டம் 67 அடிக்கும் மேல் தண்ணீர் நிரம்பி வருகிறது. மேலும் முல்லை பெரியார் அணையிலிருந்தும் மற்றும் வைகை வரத்து கால்வாய்களின் இருந்தும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வைகை அணைக்கு தண்ணீர் சீராக வந்து கொண்டு இருக்கிறது .

மேலும் , உசிலம்பட்டி பகுதியிலும் கோடைமழை செய்து வருகிறது . இந்த நேரத்தில் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டால் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில் தண்ணீர் திறந்து விட்டால்

விவசாயம் செய்வதற்கு பேருதவியாக இருக்கும். எனவே, மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!