நோயாளிக்கு கார் கொடுத்த வள்ளல் திலீபன் சக்கரவர்த்தி..!

நோயாளிக்கு கார் கொடுத்த வள்ளல்  திலீபன் சக்கரவர்த்தி..!
X

முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் வாழ்ந்த தமிழகத்தில் .. மனிதநேயமும், கொடைத்தன்மையும் மக்களிடம் இருக்கிறது என்பதை மதுரையில் நடந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது..

மதுரை இளைஞன் திலீபன் சக்கரவர்த்தி கொரானா சிகிச்சைக்காக தனது வாகனத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டரை பொருத்தி நோயாளிக்கு ஏற்ப மாற்றியுள்ளார்.. இந்த வாகனம் மூலம் மருத்துவமனைக்கு எளிதில் அழைத்து செல்ல முடியும் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டாம்.

கொரானாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் வருவதால் ஆக்ஸிஜன், படுக்கை பற்றாக்குறை நிலவுகிறது.

அதிலும் ஏழை எளிய மக்கள் பொருளாதார வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் பல்வேறு சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் இயன்ற உதவிகளை செய்துவருகின்றன.

அந்தவகையில் மதுரை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த திலீபன் சக்கரவர்த்தி தனது நண்பர் பிரசன்னா உடன் இணைந்து சமூகநலனில் அக்கறை எடுத்து தனது சொந்த வாகனத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தி கொரானா வால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் மருத்துவமனைக்கு செல்ல பயன்பெறும் வகையில் மாற்றியமைத்துள்ளார். இவருடைய இச்செயலுக்கு சமூக ஆர்வலரகள் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!