உசிலம்பட்டி அருகே பசு மாட்டை பிடிக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலி

உசிலம்பட்டி அருகே பசு மாட்டை பிடிக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலி
X

மின்சாரம் தாக்கி இறந்த ஈஸ்வரி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கணவாய் பட்டியில் மாடு பிடிக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கணவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜயோகம் மனைவி. ஈஸ்வரி (வயது 55 ). இவர் தனது தோட்டத்தில் பசு மாட்டை பிடிக்க செல்லும் பொழுது எதிர்பாராத எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் வரை மிதித்து உள்ளார்.

இந்நிலையில் மின்சாரம் தாக்கி ஈஸ்வரி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.இச்சம்பவம் குறித்து சேடபட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஈஸ்வரி உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்ததில் மின்கம்பம் வ்யர் பழுதாகி அறுந்து கிடந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக மழை பெய்து வந்த நிலையில் ஆங்காங்கே மின் கம்பங்கள் டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகி உள்ளன. அதை மின்வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.

உடனடியாக மின் வாரிய அதிகாரிகள் ஒவ்வொரு கிராமமாக சென்று மின் வயர்கள் பழுதடைந்து உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முறையாக மின் வயர்கள் இணைக்கப்பட்டு இருந்தால் இன்று உயிர்பலி ஏற்பட்டிருக்காது என அப்பகுதி மக்களும் உறவினர்களும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!