மதுபாட்டில் விற்ற இருவர் கைது: 30 பாட்டில் பறிமுதல்

மதுபாட்டில் விற்ற இருவர் கைது: 30 பாட்டில் பறிமுதல்
X

பைல் படம்

மதுரை மாவட்டம் பள்ளப்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கொட்டாம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் பள்ளபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள உணவகம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products