அதிமுக ஆட்சியில் கொலைகள் நடைபெறவில்லையா? -அமைச்சர் கே.என்.நேரு கேள்வி
அமைச்சர் கே.என்.நேரு
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக மதுரை வந்த அமைச்சர் கே .என் .நேரு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது நிறைவேறும் என்ற செய்தியாளர் கேள்விக்கு, மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் கட்டட பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்தது. விரைவில் பணிகள் முடிவுற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார் .
இதனை தொடர்ந்து தொடர் மழை காரணமாக நகர்ப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது, அதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு , தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் அடுத்த மூன்று தினங்களுக்கு மழை இருப்பதாலும் சாலைகள் புதுபிக்கும் பணி நடைபெறவில்லை என மதுரையில் மட்டும் 328 இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார் .
மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல் மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பதவி நேரடி தேர்வா அல்லது மறைமுக தேர்தல் என்ற செய்தியாளர் கேள்விக்கு, இதனைஅரசாங்கம் முடிவு செய்து தேர்தல் அறிவித்த பின் தெரியவரும் என்றார்.
காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டது மற்றும் மதுரையில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு ,
எங்கோ ஒரு பகுதியில் நடைபெறுவதை வைத்து சட்டம் ஒழுங்கு சரியில்லை என பேசக்கூடாது. அதிமுக ஆட்சியில் நடக்கவில்லையா இது ஒரு விபத்து போன்று தான் அதற்காகத்தான் இரவில் ரோந்து செல்லும் காவல்துறையினர் கையில் துப்பாக்கியுடன் செல்ல வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். என பேசிய் அமைச்சர் தற்போது தமிழகத்தில் பெய்த மழையில் கூட 12 பேர் மட்டுமே இறந்துள்ளனர். எல்லா இடங்களிலும் முதல்வர் நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார். எங்காவது ஒரு இடத்தில் நடைபெறுவதை வைத்து ஒட்டுமொத்தமாக எப்படி குற்றம் சொல்வது இதை ஒ.பி.எஸ் யிடமே கேளுங்கள் என கூறினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu