மதுரை கோரிப்பாளையத்தில் பஸ் கண்ணாடியை சேதப்படுத்தி வாலிபர்கள் ரகளை

மதுரை கோரிப்பாளையத்தில் பஸ் கண்ணாடியை சேதப்படுத்தி  வாலிபர்கள் ரகளை
X

மதுரை கோரிப்பாளையத்தில் அரசு பேருந்தின் மேற்கூரையில் ஏறி ரகளையில்  ஈடுபட்ட  வாலிபர்கள்

தேவர் குருபூஜைக்கு வந்த ஒரு சில வாலிபர்கள் பேருந்துகள் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டதால் கண்ணாடி சேதமடைந்தது

மதுரை தேவர் சிலை முன்பு அரசு பேருந்து கண்ணாடி உடைத்து இளைஞர்கள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் பதற்றமடைந்தனர்.

தமிழகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 வது குருபூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியில் மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்திருக்கும் தேவரின் உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் பொதுமக்கள் மாலை அணிவித்தும் பால்குடம் எடுத்தும் அமைதியான முறையில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில், தேவர் சிலைக்கு மரியாதை செய்ய வந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாட்டுத் தாவணியிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து கோரிப்பாளையத்தில் வந்து கொண்டிருந்தபோது பேருந்துகள் மீது ஏறி அனைத்து இளைஞர்களும் நடனம் ஆடத் தொடங்கினர் பின்பு கோரிப்பாளையத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது கற்களை வீசியதால் கண்ணாடி சேதமடைந்தது.

இதனால் பேருந்து ஓட்டுநர் மீது லேசான காயம் ஏற்பட்டது அதேபோல் பயணிகள் மீது லேசான காயம் ஏற்பட்டது. இதனால் தேவர் சிலை முன்பு பரபரப்பு காணப்பட்டது. அதற்குப்பின் காவல்துறையினரால் அந்த இளைஞர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் காவல் துறையினர் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் இருந்தும், அரசு பேருந்தை இளைஞர்கள் செல்ல விடாமல் சிறைப்பிடித்து, கண்ணாடியை உடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அரசு பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை இயக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. . இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்படது இதற்கிடையே காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை அனுப்பி வைத்தனர் இளைஞர்கள் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story
ai healthcare products