/* */

தமிழக முதல்வர் ஸ்டாலினா? மோடியா? சி.டி.ரவி ஆவேசம்

இந்த மாநில அரசால் மின்சாரம் கொடுக்க முடியவில்லை என்றால் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். மதுரை விமான நிலையத்தில் சிடி ரவி காரசார பேட்டி.

HIGHLIGHTS

தமிழக முதல்வர் ஸ்டாலினா? மோடியா? சி.டி.ரவி ஆவேசம்
X

இந்த மாநில அரசால் மின்சாரம் கொடுக்க முடியவில்லையென்றால் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.அதற்குப் பின் நாங்கள் மின்சாரம் அளிப்போம் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேட்டி அளித்துள்ளார். மதுரையில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவிக்கு மதுரை விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சி.டி.ரவி கூறுகையில்: திமுக ஆட்சி ஓராண்டு நிறைவடைந்தது குறித்த கேள்விக்கு: இந்த ஒரு ஆண்டில் திமுக என்ன செய்தார்கள் என மக்களிடம் தான் கேட்க வேண்டும். திமுக மக்களுக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றவில்லை.

நிலக்கரி விவகாரம் குறித்த கேள்விக்கு, இதை தான் அவர்கள் எப்போதும் செய்கிறார்கள். திமுக ஆட்சியில் உள்ளது இதற்கு அவர்கள் தான் பொறுப்பு. அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா. எதற்கெடுத்தாலும் அவர்கள் மத்திய அரசைதான் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழகத்தை ஆள்வது மோடி அல்ல முதல்வர் ஸ்டாலின் தான். இந்த மாநில அரசால் மின்சாரம் கொடுக்க முடியவில்லையென்றால் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்குப் பின் நாங்கள் மின்சாரம் அளிப்போம் என்றார்.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ராஜஸ்தான், ஆந்திரா, பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் இரு நாட்கள் மட்டுமே மின்தடை ஏற்பட்டதாகவும் மற்ற நாட்களில் அது போன்ற சூழல் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதை மத்திய அரசு ஏற்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. மாநில அரசுகளுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது என விளக்கமளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 12 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறையால் மின் வெட்டு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என காரசாரமாக பேட்டி அளித்தார்.

Updated On: 9 May 2022 3:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...