கோயில் உண்டியல் மற்றும் பூசாரி வீடுகளை குறிவைக்கும் கொள்ளையன்

கோயில் உண்டியல் மற்றும் பூசாரி வீடுகளை குறிவைக்கும் கொள்ளையன்
X

பைல் படம்

கோயில் உண்டியல் மற்றும் பூசாரி வீடுகளை குறிவைக்கும் கொள்ளையன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் பகுதியில் நேற்று சதீஷ்குமார் (22), திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவன் சேகர் என்ற நாய் சேகர் வயது (19), இதே பகுதியை சேர்ந்த சிவா வயது (22) சந்தேகத்திற்கிடமான முறையில் மூன்று நபர்கள் கடையை உடைத்து திருட முற்பட்டுள்ளனர்.

அப்பொழுது ராமகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியின்போது வசமாக மாட்டிக் கொண்டனர்.

அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் நாகமலை புதுக்கோட்டை, ஆஸ்டின்பட்டி, திருநகர் ஆகிய பகுதிகளில் குறி சொல்லி வருகிறார்கள். குறி சொல்லி வருவதை போல் நாடகமாடி பல கோயில் உண்டியல்களை மற்றும் பூசாரி வீடுகளையும் குறிவைத்து ஆள் இல்லாத நேரம் கொள்ளையடித்தது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் இருந்த 3 பவுன் நகை மற்றும் பித்தளை பாத்திரங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 நபர்கள் மீதும் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!