அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரைடு: மதுரையில் ஓ. பன்னீர் செல்வம் பேட்டி

மதுரை விமான நிலையத்தில் ஓ. பன்னீர் செல்வம் பேட்டி அளித்தார்.
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நகராட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வின் வியூகம் குறித்த கேள்விக்கு நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலில் அ.தி.மு.க. தேர்தலை எதிர்நோக்கி தயாராக உள்ளது என்றார்.
குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை கூடியது குறித்த கேள்விக்கு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்று கூறியிருந்தோம். அது தற்போது நிரூபணமாகியுள்ளது என்றார்.
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது நடைபெறும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை குறித்த கேள்விக்கு நான் ஏற்கனவே கூறி இருந்ததை போல இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu