திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு வெற்று வாக்குறுதி: ஓபிஎஸ்

திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு வெற்று வாக்குறுதி: ஓபிஎஸ்
X

ஓபிஎஸ்(பைல் படம்)

திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த வாக்குறுதி வெற்று அறிக்கை என்பது நிரூபணமாகியுள்ளது

பெட்ரோல் டீசல் விலை உயர்வை பார்க்கும் பொழுது திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்று கூறியிருந்தோம். அது தற்போது நிரூபணமாகியுள்ளது என்றார் தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம்.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்த தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் அவர் கூறியதாவது: நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது.

குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை கூடியுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்று கூறியிருந்தோம். அது தற்போது நிரூபணமாகியுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நடைபெறும் ரெய்டு நடவடிக்கை, நான் ஏற்கெனவே கூறி இருந்ததை போல இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!