திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் அ.தி.மு.க. வெளிநடப்பு

பைல் படம்.
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேர்மன் வேட்டையன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கமிஷனர் உதயகுமார், வட்டார அலுவலர் ராமன் முன்னிலை வகித்து நடைபெற்ற நிலையில், திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு சொந்தமான 19 கடைகள் 2004ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவரை பொது ஏலம் நடைபெறவில்லை? மேலும் இதுவரை பொது ஏலம் நடத்திய கூடுதல் தொகையை நிர்ணயிக்கப்படவில்லை.
அரசு வழிகாட்டுதலின் புதிய வாடகையை நிர்ணயம் செய்ய தீர்மானிக்கப்பட்ட நிலையில், தி.மு.க. சேர்மன் வேட்டையன் ஒருதலைப்பட்சமாக புதிய வாடகை நிர்ணயம் செய்ய தீர்மானித்தார். இதில் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu