காலி இடங்களில் குப்பையை கொட்டும் மக்கள்

காலி இடங்களில் குப்பையை கொட்டும் மக்கள்
X

திருப்பரங்குன்றம் திருநகர் பாலாஜி நகர் பகுதியில் காலி இடங்களில் கொட்டும் குப்பைகள்

திருப்பரங்குன்றம் திருநகர் பாலாஜி நகர் பகுதியில் காலி இடங்களில் குப்பை கொட்டுவதால் நோய்த்தொற்று ஏற்படும் அவலம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் பாலாஜி நகர் உள்ளது இங்குள்ள ராகவேந்திரா தெரு மற்றும் சித்தி விநாயகர் கோவில் அருகே உள்ள காலி இடங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் தேங்கும் குப்பைகளை கொட்டி தெருக்களை மாசடையச் செய்கின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்பொழுது கரோன தொற்று பரவி வரும் நிலையில் மேலும் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் இருக்க சுகாதாரத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என . பாலாஜி நகர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!