தோப்பூர் அரசுமருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் இயந்திரங்கள் வழங்கிய பென்குவின் நிறுவனம்..!

தோப்பூர் அரசுமருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் இயந்திரங்கள் வழங்கிய பென்குவின் நிறுவனம்..!
X

திருப்பரங்குன்றம் தோப்பூர் அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள 6 ஆக்ஸிஜன் இயந்திரங்களை பென்குவின் ஆயத்த ஆடை தயாரிக்கும் தனியார் நிறுவனம் வழங்கியது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் அரசு கொரோனா கவனிப்பு மையம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . தற்போது ஏற்பட்டுள்ள ஆக்சிசன் தட்டுப்பாட்டை அறிந்து பென்குவின் ஆயத்த ஆடை தயாரிக்கும் தனியார் நிறுவனம். தங்களது நிறுவனத்தின் சார்பில் ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள 6 தானியங்கி ஆக்சிஜன் மிஷன் வழங்கப்பட்டன.

பென்குவின் நிறுவனத்தின் தலைவர் அன்புகனி கூறும் போது,

தோப்பூர் கொரோனா கவனிப்பு மையத்தில் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஆக்சிசன் தட்டுப்பாடு உள்ள நிலையில் தகவலறிந்து எங்களது நிறுவனத்தின் சார்பில் ஆறு தானியங்கி ஆக்சிசன் எந்திரங்கள் வழங்கப்பட்டது. ஜெர்மனியில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆக்சிசன் தானியங்கி மெஷின்களில் தற்போது ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என கூறினர் எனக் கூறினார்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!