குடும்பத் தகராறில் மனைவி மகளுடன் விஷம் குடித்தவர் பலி

குடும்பத் தகராறில் மனைவி மகளுடன் விஷம் குடித்தவர் பலி
X

பைல் படம்

மதுரை அருகே உள்ள வடபழஞ்சி பகுதியைச் சேர்ந்த அழகுமலை கண்ணன் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி அழகுமலை கண்ணன் பரிதாபமாக உயிரிழப்பு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே குடும்ப தகராறில் மனைவி மகளுடன் விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வடபழஞ்சியை சேர்ந்தவர் அழகுமலை கண்ணன் இவருக்கு சுமிதா, உதயா, கிருத்திகா 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமிதா காதல் திருமணம் செய்துகொண்டார்.

மேலும் குடும்ப தகராறு காரணமாக மற்றொரு மகள் உதயா வீட்டை விட்டு வெளியேறி மகளிர் விடுதியில் தங்கி உள்ளார்.

இந்நிலையில் மனமுடைந்த தந்தை அழகுமலை கண்ணன் மனைவி மற்றும் கிருத்திகா ஆகியோருடன் புதன்கிழமை இரவு விஷம் விஷமருந்தி தற்கொலை செய்ய முடிவு செய்து மகள் கிருத்திகா மனைவி மற்றும் அழகுமலை கண்ணன் மூவரும் விஷம் குடித்து உள்ளனர்.

இதனை அறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அழகுமலை கண்ணன் புதன்கிழமை உயிரிழந்தார்.

அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அவர்கள் உறவினர்களிடையை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்