மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவ. 14 -இல் கார்த்திகை உற்சவம் தொடக்கம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை மாதம் பசலி - திருக்கார்த்திகை உற்சவம் வருகிற நவ.14 -ஆம் தேதி துவங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சிவபெருமான் பல்வேறு அவதாரமெடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புராதானமான புண்ணிய தலமாகும். இந்த திருக்கோயிலில் கார்த்திகை மாதம் பசலி - திருக்கார்த்திகை உற்சவம் வருகிற நவ.,14 ஆம் தேதி துவங்கி நவ.,23 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை , மாலை இரண்டு வேளைகளிலும் ஆடி வீதி புறப்பாடாகியும், நவ., 19 ஆம் தேதி திருக்கார்த்திகை அன்று மாலை திருக்கோயில் முழுவதும் இலட்ச தீபம் ஏற்றப்படும். மேலும், அன்றைய தினம் மாலை 7.00 மணியளவில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, அம்மன் சன்னதி திருவாட்சி மண்டபம் சென்று சுவாமி சந்நிதி, அம்மன் சந்நிதி சித்திரை வீதியில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சிக்கு எழுந்தருளி, மேற்படி இரண்டு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu