ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு வழங்க மதுரை தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம்

ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு வழங்க மதுரை தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம்
X

ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு வழங்குவதற்காக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு வழங்குவதற்காக மதுரை தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது.

தமிழர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் விழாவில் தமிழர்களின் வீரத்தை அடையாளம் காட்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகளுக்கும், வீரர்களுக்கும், பரிசுகள் வழங்க ரூ. 10லட்சம் மதிப்பிலான தங்க காசுகள், வாஷிங்மெஷின், பீரோ ஆகிய பொருட்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகரிம் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்சேடபட்டி மு.மணிமாறன் வழங்கினார்.

உடன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், பி.எஸ்.என்.எல். செல்வம், ஏர்போர்ட் பாண்டி, திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைச் சேர்மன் ஜெயக்குமார், தகவல் தொழில் நுட்ப அணி பாச பிரபு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. தொண்டர்கள், திருமங்கலம் தொகுதி தி.மு.க. தொண்டர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare