மதுரை விமான நிலையம் விரிவாக்க பணிக்கு ரூ. 201 கோடி ஒதுக்கீடு
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டு தொகை வழங்குவதற்கென ரூ.201 கோடியே 19 லட்சத்து 116 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வெளியிட்ட தகவல்: மதுரை விமான நிலையம் விரிவாக்க பணிக்கு ரூ. 201 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் இந்த இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
மதுரை மாவட்டம் மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தாலுகாவில் விமான நிலையம் விரிவாக்கத்திற்காக அயன்பாப்பாகுடி, குசவன்குண்டு, கூடங்குளம், ராமன் குளம், மற்றும் பெருங்குடி ஆகிய கிராமங்களில் 633 . 17 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.நில உரிமையாளரிடம் கையகம் செய்யப்பட்ட பட்ட நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவதற்காக 29 தீர்மானங்கள் பிறப்பிக்கப்பட்டு ரூ. 201 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரத்து 116 நிதி வர பெற்றுள்ளது.
இதில் மொத்தமுள்ள 3.069 நில உரிமையாளர்களுக்கு ரூ 155 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரத்து 929 இழப்பீட்டு தொகை மதுரை விமான நிலையம் விரிவாக்க தனி வட்டாட்சியர்களால் வழங்கப்பட்டுள்ளது. எனவே மதுரை விமானநிலையம் விரிவாக்கம் இடத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் நில உரிமையாளர்களில் இழப்பீட்டு தொகையை இதுவரை பெறாதவர்கள் நில உரிமை தொடர்பான சான்று, ஆவணங்களுடன் மதுரை விமானநிலையம் விரிவாக்கம் தனி வட்டாட்சியர் அலுவலகங்களில் இழப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
மதுரை விமானநிலையம் விரிவாக்கம் தனி வட்டாட்சியர் அழகு 1,2 பழைய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் என்ற முகவரியில் வரும் 1ஆம் தேதி முதல் இரண்டாம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்று தங்கள் நிலங்களுக்கான இழப்பீடு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று உள்ளார்.
தற்போது இழப்பீட்டுத் தொகை வழங்கி நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு விட்டதால் இனியாவது மதுரை விமானநிலையம் விரிவாக்கம் உடனடியாக தொடங்கி கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மதுரை மாவட்ட மக்களிடையே.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu