மதுரை நாகமலை புதுக்கோட்டையில் குட்கா பதுக்கி வைத்திருந்தவர் கைது

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் குட்கா பதுக்கி வைத்திருந்தவர் கைது
X

குட்கா பதுக்கியதாக கைது செய்யப்பட்டவர்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் பெட்டிக்கடையில் 21 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் அதிகமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் புகையிலை தடுப்பு சம்பந்தமாக கடைகளில் தீவிர சோதனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நாகமலை புதுக்கோட்டை நடுநிலைப் பள்ளி அருகே பெட்டி கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் கடை உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அந்த நபர் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த ஜெயகணேஷ் வயது (43) என்பது இவர் நாகமலை புதுக்கோட்டையில் குடும்ப வறுமை காரணமாக தஞ்சம் புகுந்து பெட்டிக்கடை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து ஜெயகணேஷிடம் இருந்த 21 கிலோ எடை கொண்ட குட்கா, பான் மசாலா 50 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!