மார்ச் 27 முதல் புதுவைக்கு விமான சேவை: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

மார்ச் 27 முதல் புதுவைக்கு விமான சேவை: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
X
கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் பேட்டி. வரும் 1ஆம் தேதி முதல் புதுவைக்கு விமான சேவை தொடங்க உள்ளது

காரைக்குடி கம்பன் கழக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது உலகிலேயே சில நாடுகள் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்த ஆரம்பித்துள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய சாதனை புரிந்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கள்கிறேன். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். கொரோனா அளவு குறைந்ததால் தடுப்பூசி போட வேண்டாம் என்பதே இல்லாமல் தடுப்பு ஊசி போட்டதால் தான் கொரானா இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டதால் தான் எத்தனை கொரோனா அலை வந்தாலும்கூட நாம் கட்டுப்படுத்த முடியும் .

வரும் 27ஆம் தேதி முதல் புதுவைக்கு விமான சேவையை தொடங்க உள்ளது. அரசு பள்ளிகள் தரம் உயர்த்த் வேண்டும். அனைவரும் அரசு பள்ளிகளை நோக்கி வரவேண்டும். அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்த வேண்டும்.

தமிழகத்தில் பெண்களுக்கான திட்டங்கள் நிறைய செயல்படுத்துவதை போல புதுச்சேரியில் செயல்படுமா? என்ற கேள்விக்கு? புதுச்சேரியில் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு அரசு மாதிரி இன்னொரு அரசு இருக்க முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture