தோட்டக்கலை பயிற்சி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
நிலமில்லாத விவசாயத் தொழிலாளா்களுக்கு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தோட்டக்கலைத் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சா் அறிவித்திருந்தாா்.
இது குறித்து மதுரை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் ரேவதி கூறியதாவது:
மதுரை மாவட்டத்தில் நிலமில்லாத விவசாயத் தொழிலாளா்கள் 102 பேருக்கு பயிற்சி அளித்து தொழில் முனைவோராக மாற்றுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பூங்கொத்து தயாரித்தல், பூ அலங்காரம் செய்தல், நுண்ணீா் பாசன அமைப்புகள் நிறுவுதல் மற்றும் பராமரித்தல், தேனீ வளா்ப்பு ஆகிய பயிற்சி அளிக்கப்படும்.
பூஞ்சுத்தியில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணை, திருப்பரங்குன்றம் பாரம்பரிய மலா் மகத்துவ மையம் ஆகிய இடங்களில் 30 நாள்களுக்கு குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு போக்குவரத்துச் செலவாக நாளொன்றுக்கு ரூ.100 வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்களை அணுகி, விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu