மதுரையில் 80ஆயிரம் விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

Exam News Today
X
Exam News Today - மதுரையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம்கள் தொடங்கியது

Exam News Today - மதுரை மதுரையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம்கள் தொடங்கின.

பிளஸ் 2 வுக்கு கேப்ரன் ஹால், கேரன் மெட்ரிக் பள்ளிகளில் மதிப்பீட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் அலுவலராக மதுரை டி.இ.ஓ., விஜயா, உசிலம்பட்டி டி.இ.ஓ., ராகவன் நியமிக்கப்பட்டுள்ளனர்.பாடம் வாரியாக கலக்கப்பட்ட 80 ஆயிரம் விடைத்தாள் இம்முகாமிற்கு வழங்கப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் உட்பட 500 பேருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்புக்கு மதுரை ஓ.சி.பி.எம்., திருநகர் இந்திரா காந்தி மேல்நிலை பள்ளிகளில் முகாம் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் அலுவலர்களாக மேலுார் டி.இ.ஓ., உதயகுமார், திருமங்கலம் டி.இ.ஓ., கோகிலா நியமிக்கப்பட்டுள்ளனர்.பாடம் வாரியாக கலக்கப்பட்ட 75 ஆயிரம் விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளன. இங்கும் 500 பேருக்கு பணி ஒதுக்கப்பட்டள்ளது. ஒரு வாரத்திற்குள் திருத்தும் பணி முடியும். ஜூன் 9ல் பிளஸ் 1 பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் துவங்கவுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!