திமுக சார்பில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

திமுக சார்பில்  5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
X
மதுரை திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் துப்புரவு பணியாளர்கள், ஏழை எளிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மதுரை மேல அனுப்பானடி 87வது வட்டத்தின் திமுக தெற்கு மாவட்டம் இளைஞரணி அவனியாபுரம் கிழக்கு பகுதி சார்பில் தமிழக முதல்வர் மு . க. ஸ்டாலின், புதல்வர் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு சுமார் 5 ஆயிரம் பேருக்கு, மதுரை தெற்கு திமுக மாவட்ட செயலாளர் ,மு. மணிமாறன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். ஏற்பாடுகளை மதுரை அவனியாபுரம் கிழக்குப் பகுதி இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் .காளிதாஸ் நடத்தினர்.

விழாவில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார். மேலும் மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி முக்கிய நிர்வாகிகள், திமுக கட்சி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் நன்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவிகளும், பெண்களுக்கு சேலை வழங்கினர்.

Next Story