திமுக சாதனை அரசல்ல; சோதனை அரசு: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சனம்

திமுக சாதனை அரசல்ல; சோதனை அரசு: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சனம்
X
திமுகவின் ஓராண்டு ஆட்சி சாதனை அரசாக இல்லை மக்களுக்கு சோதனை அரசாகதான் உள்ளது என்றார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை

மதுரையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:தொடர்ந்து ஒரு வருடமாக பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவைகளை பேசுகிறோம். அதை இந்த திமுக அரசு செய்யப்போவதில்லை.பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நம்பி லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் திமுகவுக்கு வாக்களித்தனர்.

பாஜக ஆரம்பத்திலேயே இது நடைமுறை சாத்தியம் இல்லாதது எனக் கூறியது. புதிய பென்சன் திட்டத்தில் மக்களுக்கு தேவையான வசதிகள் உள்ளது என பாஜக சொல்லியதை தற்போது ஏற்றுக்கொண்டுள்ளனர்.நாங்கள் சொன்னதைதான் தற்போது நிதியமைச்சரும் சட்டப்பேரவையில் சொல்லியுள்ளார்.இதன்மூலம், தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் கூறியது பொய் என்பதை சட்டசபையிலேயே ஒத்துக்கொண்டுள்ளனர்.

ஆளுநர் பேசியதை அரசியலாக்க வேண்டாம்: பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் என ஆளுநர் மட்டுமல்ல பல துறைசார்ந்த வல்லுநர்களும் கூறியுள்ளனர்.குறிப்பாக, கேரளா, பாலக்காடு, ஆழப்புலா என கடந்த 2 ஆண்டுகளில் நடந்த 66 கொலைகள், சமீபத்தில் நடந்த 2 முக்கிய கொலைகளில் பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா இயக்கம் சம்பந்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் பேசியது, அவரின் உளவுத்துறை அறிவில் பேசியது. அவர் 30 ஆண்டுகால உளவுத்துறை அனுபவம் மிக்கவர். உள்நாட்டு பாதுகாப்பில் இருந்த ஆளுநர் அவ்வாறு பேசியுள்ளார்.இதனை அரசியலாக்க கூடாது. உண்மை என்னவோ அதை ஆளுநர் சொல்லியுள்ளார்.

ஆடம்பர செலவு செய்யும் திமுக: தமிழ்நாட்டிற்கு நிலக்கரி கூடுதல் தேவை உள்ளதாக திமுக சொல்கிறது.எங்களால் அதை சமாளிக்க முடியவில்லை என்கின்றனர். மாநில அரசு தங்கள் லோடை குறைவாக மதிப்பீடு செய்துவிட்டு மற்றும் அனல்மின் நிலையங்களில் போதிய பராமரிப்பு செய்யாததால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதை மறைத்துவிட்டு, கோல் இந்தியா நிலக்கரி மீது பழி போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தில் பராமரிப்பில் தவறு செய்துள்ளனர்.கோல் இந்தியாவை பொறுத்தவரை குறை இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர். TANGEDCO-வில் நஷ்டம் எனக்கூறிவிட்டு அதே துறை சார்ந்த விழா ஒன்றை ஆடம்பர செலவு செய்து நடத்தி உள்ளனர்.இதுபோன்று, செய்தால் மக்களுக்கு எப்படி மின்சாரம் கிடைக்கும்.

சாதனை இல்லை சோதனைதான்: எனவே, கோல் இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை எனச்சொல்வது மற்றுமொரு பொய். தமிழ்நாட்டில் தற்போது யூபிஎஸ் தேவை. இனி, தமிழ்நாட்டுக்கு ஜெனரேட்டர் தேவை. வரும் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் நாமே மின்சாரத்தை தயார் செய்யும் நிலை ஏற்படும். ஓராண்டு கால ஆட்சியை சாதனையாக அரசு பேசி வருகிறது.திமுக சாதனை செய்யவில்லை, இது மக்களுக்கு சோதனை அரசாகத்தான் உள்ளது என்றார் அண்ணாமலை..

Tags

Next Story
ai marketing future