புனித தீர்த்தமாடும் குளத்தில் துர்நாற்றம் வீசுவதாக பக்தர்கள் புகார்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் புனித தீர்த்தகுளமாக சரவணபொய்கை
மதுரை மாவட்டத்தில் ஆறுபடை வீடுகளில் முதல்படை விடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் புனித தீர்த்தகுளமாக சரவணபொய்கை திகழ்கிறது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கனமழை மதுரை பகுதியில் பெய்த நிலையில் சரவண பொய்கை நீர் நிரம்பியது. இக் குளத்திற்கு மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் இக்குளத்தில் நீர் வெளியேற வசதி ஏதும் இல்லை.கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் நீர் நிரம்பி காணப்பட்டதால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீராடிவிட்டு கோயிலுக்கு செல்கின்றனர்.
இதில் முக்கியமாக கோவிலுக்கு திருமஞ்சனம் எடுத்து செல்லப்பட்டு கோவிலின் கொடிமர அடிப்பகுதியில் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஏராளமானோர் சரவணப்பொய்கையில் நீராடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சிலர் இரவில் வலை போட்டு சரவணப்பொய்கையில் உள்ள மீன்களை திருட்டுத்தனமாக பிடித்து வருகின்றனர்.இதனால் கழிவுகள் தேங்கி இக்குளம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும் மேலும் குளத்தின் குப்பைகளும் மிதக்கின்றன என்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனை இந்து அறநிலைததுறை மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் கோயிலின் புனித இக்குளத்தை பராமரிக்க இப்பகுதி மக்களும் பக்தர்களும் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இக்குளத்தின் பராமரிப்பு இல்லை என்றால் பெரும் தொற்றுநோய் பரவும் சூழ்நிலையும் உருவாகக்கூடும் என்று இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் அதிக கொசுக்கள் உற்பத்தியாகிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu