மதுரையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள்.
மதுரை திருநகர் ஹார்விபட்டி பேருந்து நிலையத்தில், பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், தொழிலாளர் விரோத கார்ப்பரேட் ஆதரவு சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய கோரியும், அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தின் ஒருபகுதியாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில், சிபிஎம் சி.ராமகிருஷ்ணன், ஏஐடியுசி பா.காளிதாஸ், ராமச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பழனிச்சாமி, வி.தொ.சங்கம் சொ.பாண்டியன், ஏஐகேஎஸ் பி.மகாமுனி, சி.ஐ.டி.யு கே.அரவிந்தன், டியுசிசி பி.முத்துராஜா, சுப்பிரமணியன், எஐடியுசி மாவட்ட நிர்வாகி ஒ.சுப்புக்காளை, மாவட்ட துணை செயலாளர் கு.சந்தனம் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்திய தேசிய சம்மேளனம் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu