கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் தனிஒருவன்

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் தனிஒருவன்
X

மதுரை திருப்பரங்குன்றத்தில் கொரோனாவை தடுக்க வேண்டி மாஸ்க், கப சுரக் குடி நீர் வழங்கி தன்னார்வலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (54) இவர் டீக்கடை நடத்தி வருகிறார். தற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும் விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

சோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் மாஸ்க் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். ரவிச்சந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரோனா தொடருக்கு தனது வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்காக திருமங்கலம் டிஎஸ்பி வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!