அனுமதியின்றி இயங்கிய எலக்ட்ரோபதி மருத்துவக்கல்லூரிக்கு சீல் வைப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டம் திருப்பரங்குன்றம் வட்டத்திற்கு உட்பட்ட திருநகர் பகுதியில், UVS ELECTROPATHY AND HOSPITAL என்ற கல்வி பயிற்சி நிறுவனமானது தமிழக அரசின் அனுமதி பெறாமல் செயல்படுவதாக கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது கடந்த 14 .4 .2020 அன்று UVS ELCTOPATHI AND HOSPITAL என்ற கல்வி நிறுவனமானது, அரசின் அனுமதி பெறாமல் செயல்படுவது, இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம் கண்டறிந்து, உயர்நீதிமன்றம் மூலம் இந்தக் கல்வி நிறுவனத்தின் மூடுமாறு கடிதமொன்று அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில் கடிதம் கிடைக்கப் பெற்ற ஏழு தினங்களுக்குள் கல்வி நிறுவனத்தை மூடிவிட உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவை மீறுகின்ற வகையில் கல்வி நிறுவனமானது தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் மருத்துவ சட்டம் 1997 விதி 2018 ( Cea-1997)இன் படி அரசிடம் இருந்து அனுமதி ஏதும் பெறப்படாத நிலையில் கல்வி நிறுவனம் இயங்கியதால், திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதா தலைமையில் அதிகாரிகள் நேற்று நிறுவனத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் வெளியே அனுப்பிவிட்டு இந்த கல்வி நிலையத்தை மூடி சீல் வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu