கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: கணவன் மனைவி உள்பட 3 பேரிடம் விசாரணை

கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: கணவன் மனைவி உள்பட 3 பேரிடம் விசாரணை
X
மதுரை வில்லாபுரத்தில் கனடாவில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்த கணவன் மனைவி மீது போலீஸார் வழக்கு பதிவு

மதுரை வில்லாபுரம் பகுதியில் கனடாவில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்த புகாரில்கணவன்-மனைவி உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், வில்லாபுரம், மணிகண்டன் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு( 31 ). இவர் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி சேர்ந்தவர் குருநாதன்( 31 ) அவரது மனைவி பானுப்பிரியா, உறவினர் முருகேசன் ஆகிய சேர்ந்து மூவரும் கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, மதுரை விமான நிலையத்தில் வைத்து தினேஷ்பாபுவிடம் ரூ. 10 லட்சம் 34 ஆயிரம் பெற்றுள்ளனர் . ஆனால், இவர் கூறியபடி வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்து ஏமாற்றியது தெரிய வந்தது. இது குறித்து தினேஷ்பாபு அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் . புகாரின் அடிப்படையில் போலீசார் குருநாதன் மற்றும் மனைவி பானுப்பிரியா உறவினர் முருகேசன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!