மதுரை: டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்தவர் கைது

மதுரை: டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்தவர் கைது
X
மதுரையில், மனமகிழ் மன்றம் தொடங்குவதாக கூறி டாஸ்மாக் ஊழியரிடம் ரூ 20 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதி, என்.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் அய்யர் வயது (40). டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அறிமுகமான மதுரை எல்லீஸ் நகர், அருள் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் ஒத்தக்கடை சேர்ந்த பாலமுருகன், சதீஸ்வரன் ஆகிய மூவரும், மனமகிழ் மன்றம் தொடங்க இருப்பதாகவும், ஒரு கோடி ரூபாய் தேவைப்படுவதால் பணி தாமதமாவதாகவும் கூறியுள்ளனர்.

அத்துடன், டாஸ்மாக் ஊழியர் அய்யரிடம் ரூ 20 லட்சம் கொடுத்து பங்குதாரராக சேரலாம் என கூறி, தொகையை வாங்கியுள்ளனர்.பின்னர், 2020 பிப்ரவரி மனமகிழ் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 அக்டோபர் மாதம், மனமகிழ் மன்றத்தை பங்குதாரரான அய்யருக்கு தெரியாமல், அதனை வேறு நபர்களுக்கு விட்டுவிட்டனர். மேலும் ஐயரின் பங்கு தொகை ரூ 20 லட்சம் தரவில்லை.

இதனைத் தொடர்ந்து, பணத்தை ஏமாற்றிய மேற்படி மூன்று நபர்கள் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம், அய்யர் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் பாலசுப்பிரமணியன், சதீஸ்வரன், பாலமுருகன் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!