மதுரை அவனியாபுரத்தில் 8 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது

மதுரை அவனியாபுரத்தில் 8 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது
X

மதுரை அருகே அவனியாபுரத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 8000 ஆயிரம் ரேஷன் அரிசி.

மதுரை அருகே அவனியாபுரத்தில் பதுக்கி வைத்திருந்த 8,000 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 8000 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்தனர். அவனியாபுரத்தில் உள்ள நியாய விலை கடையில் அரிசி கடத்துவதாக குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சம்பந்தப்பட்ட நியாய விலை கடையில் இருந்து அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு எம்எம்சி காலனியில் உள்ள இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8230 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. முகமது ஜாபீர் அலி உதவியாளர் மணிகண்டன் மாரிச்செல்வம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பொது மக்களுக்கு போய் சேர வேண்டிய நியாயவலை கடை அரிசி மூட்டை சீனி என்னை போன்ற உணவுப் பொருட்களை திருடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

Tags

Next Story
why is ai important in business