திருப்பரங்குன்றம் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பரங்குன்றம் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜன்செல்லப்பா இன்று மதுரை மன்னர் கல்லூரி அருகே உள்ள திருச்சபையில் பிரார்த்தனையில் ஈடுபட்டு கிறிஸ்தவர்களிடம் தனது ஆதரவை திரட்டினார்.மேலும் அவர்களிடத்தில் பேசும்போது தான் வேட்பாளராக வெற்றி பெறும் பட்சத்தில் ஜாதி, மத, சமய வேறுபாடின்றி தொகுதி வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!