மதுரையில் மின் உற்பத்தி செய்யும் இடத்தில் தீ விபத்து.

மதுரையில் மின் உற்பத்தி செய்யும் இடத்தில் தீ விபத்து.
மதுரைக்கு வந்த சோதனையா?

மதுரை மாவட்டம் பைக்காரா பகுதியில் மின் உற்பத்தி செய்யும் ஆலை அமைந்துள்ளது.இங்கு பகிர்மானத்திற்காக அளவுக்கதிகமான டிரான்ஸ்பார்ம்கள் அமைந்துள்ளது.

இங்கிருந்து சமயநல்லூர் பகுதிக்கு மின்சாரம் அனுப்பும் பிரிவில் டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து ஏற்பட்டது. பணியில் இருந்த ஊழியர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

இதனால் மிகப் பெரிய விபத்து தடுக்கப்பட்டது.தற்போதைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாமல் பல பகுதிகள் ஸ்தம்பித்து இருக்கும். தற்போது அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கப்படும் என்று பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story