லஞ்சம் வாங்கும் விஏஓ மீது நடவடிக்கை தேவை போஸ்டர் அடித்து ஒட்டிய பொதுமக்கள்
லஞ்சம் வாங்கும் விஏஓ மீது நடவடிக்கை தேவை என்று இந்தியகம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை என்ற பெயரில் தல்லாகுளம் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட தனக்கன்குளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக இருந்து வரும் அழகேசன் என்பவர், அரசு நலத்திட்டங்களை கொண்டு செல்வதற்கு லஞ்சம் கேட்டு மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீண்டநட்களாக பொதுமக்களை அலைகழித்து வருவதாகவும் புகார் தெரிவித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒட்டப்பட்ட சுவரொட்டியால் வருவாய்த்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu