மதுரையில் மால்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டது.

மதுரையில் மால்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டது.
X
மதுரை நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பெரிய மால்கள் திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

கொரோனா 2-வது அலை காரணமாக தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி மதுரை நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பெரிய மால்கள் திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மால், அண்ணாநகர் பகுதியில் உள்ள மில்லினியம் மால், காளவாசல் பகுதியில் உள்ள பிக் பஜார் மற்றும் அண்ணா நகர், கோரிப்பாளையம், சிம்மக்கல், காளவாசல் என நகர் பகுதியில் உள்ள திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

அதேபோல் பெரிய வணிக நிறுவனங்களும் சலூன்களும் மூடப்பட்டுள்ளது. உணவகம் மற்றும் டீக்கடைகளில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறதா என மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!