வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் பொதுமக்கள் மகிழ்ச்சி...

வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்  பொதுமக்கள் மகிழ்ச்சி...
X
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை

தேனி மாவட்டம் சோத்துப்பாறை மற்றும் சுற்றுபுற நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வராக நதி வழியாக வைகை ஆற்றுக்கு தண்ணீர் நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது .

தேனி கொடைக்கானல் மலைப்பகுதியில் , கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன்காரணமாக சோத்துப்பாறை அணை நிரம்பி வரும் நிலையில் வராக நதி வழியாக வைகை ஆற்றுக்கு தண்ணீர் வரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் வைகை ஆற்றின் கரையேரரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் குளிப்பது கால்நடைகளை ஆற்றில் மேய்ச்சலுக்கு விடுவது போன்றவை கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

மேலும் வைகை ஆற்றின் தரை பாலங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் வைகை ஆற்றில் தண்ணீர் வரும் போது வண்டியூர் தெப்பகுளத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கடை எடுக்கப்பட்டுள்ளதால் வண்டியூர் தெப்பம் தற்போது நிறைந்து வருகிறது .

தெப்பத்தில் தண்ணீர் எப்போதும் இருக்கும் நிலையில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் சுற்றுபகுதிமக்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!