பெண் ஆசிரியரை கொன்று வீட்டில் புதைத்த வக்கீல், தானும் தற்கொலை

பெண் ஆசிரியரை கொன்று வீட்டில் புதைத்த வக்கீல், தானும் தற்கொலை
X
மதுரை அருகே திருமங்கலத்தில் பெண் ஆசிரியரை கொன்று வீட்டில் புதைத்த வக்கீல் தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் உள்ள ஆறுமுகம் நகர் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன்(42) , இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்

மேலும் அவரது வீட்டில் தன் கையால் எழுதப்பட்ட 10 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்த போலீசார் இன்று சித்ரா தேவியின் உடலை படுக்கை அறையில் உள்ள குளியலறையில் தோண்டி எடுக்கப்பட்டு வீட்டிலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .

இதனிடையே கடந்த (ஏப்ரல்)மாதம் 2-ஆம் தேதி, பசும் பொன் தெரு - வில் உள்ள யோகா ஆசிரியை சித்ராதேவி (32) இரு சக்கர வாகனத்துடன் மாயமான ஆசிரியையை வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் கடத்தி வைத்திருப்பதாகவும் கூறி , சித்ரா தேவியின் தந்தை கண்ணையா காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் , நீதிமன்றத்தை நாடி இருந்தது குறிப்பிடத் தக்கது.

வழக்கறிஞரே பெண்ணை தனது வீட்டில் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இன்று பெண்ணின் பிணத்தை தோண்டி எடுத்து தாசில்தார் D.S.P அரசு மருத்துவர்கள் புதைக்கப்பட்ட வீட்டிலையே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம். சித்ரா தேவியின் உடல் ஒப்படைக்கப்பட்டது

Tags

Next Story
why is ai important to the future