திமுகவிற்கு ஆதரவு: முன்னாள் வக்பு வாரிய தலைவர்

திமுகவிற்கு ஆதரவு: முன்னாள் வக்பு வாரிய தலைவர்
X

தமிழ்நாடு அரசு முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்பு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஹைதர் அலி:

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், வாக்காளர்களிடம் தீவிர பிரச்சாரம் செய்வது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து வெற்றிபெறச் செய்வது, திமுக தேர்தல் அறிக்கை குறித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்வது, தமிழகத்தில் ஏழு தமிழர்கள் மற்றும் 39 இஸ்லாமியர்கள் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள இவர்களை எவ்வித பாகுபாடும் காட்டாமல் கருணை அடிப்படையில் விடுதலை செய்யக் கோருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது என்று கூறினார்.

அதிமுக, பிஜேபி கூட்டணியை எதிர்க்கும் வலிமை உள்ள கட்சியாக திமுக இருக்கிறது. ஆதலால் திமுகவை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார்.

டாக்டர். சரவணன் பிஜேபிக்கு சென்றது குறித்த கேள்விக்கு டாக்டர் சரவணன் அதிமுகவிற்கு சென்றார் அதிலிருந்து பிஜேபிக்கு போனார் பின்னர் திமுக விற்கு சென்று எம்எல்ஏவாக ஆனார், திரும்பவும் பிஜேபிக்கு சென்றுள்ளார்.

இந்த பிஜேபி அரசானது யாரையும் விலை கொடுத்து வாங்கும். டாக்டர் சரவணன் விபி துரைசாமி போன்றவர்கள் அந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக தான் பார்க்கப்படுகிறார்கள். கொள்கை ரீதியாக வந்தவர்கள் அல்ல எனக் கூறினார். இந்த கூட்டத்திற்கு திருச்சி ராம்நாடு சேலம் உள்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்து திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!