வாக்கு எண்ணிக்கையை உடனடியாக தொடங்க வலியுறுத்தல்

வாக்கு எண்ணிக்கையை உடனடியாக தொடங்க வலியுறுத்தல்
X

தமிழகத்தில் உடனடியாக தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என்று சமூக போராளி நந்தினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தனது தந்தை ஆனந்தனுடன் இணைந்து போராளி நந்தினி இன்று, சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து முடிவை அறிவிக்க 25 நாட்கள் தாமதிப்பது பலவித முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் எனவே உடனடியாக வாக்குகளை எண்ணி தேர்தல் முடிவை அறிவிக்க கோரி இந்தப் போராட்டம் நடத்துவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிற மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கும் இங்கு நடைபெறுகின்ற தேர்தலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆகையால் இங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பது நியாயமில்லை. இதில் முறைகேடு நடத்துவதற்காகவே இவ்வாறு செய்கிறார்கள். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஆகையால் வாக்கு எண்ணிக்கையை உடனடியாக துவங்க வேண்டும் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்