மதுரையில் இருந்து ஆந்திராவின் செகந்திராபாத்திற்கு சிறப்பு ரயில்

மதுரையில் இருந்து ஆந்திராவின் செகந்திராபாத்திற்கு சிறப்பு ரயில்
மதுரையில் இருந்து ஆந்திரா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

மதுரையில் இருந்து ஆந்திரா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி செகந்திராபாத் முதல், மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) செகந்திராபாத்தில் இருந்து ஏப்ரல் 11, 18 27 ஆகிய திங்கட்கிழமைகளில் 09:25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு எட்டு 08:45 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மறுமார்க்கத்தில், மதுரை - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07192) மதுரையில் இருந்து ஏப்ரல் 13,20,27 ஆகிய புதன் கிழமைகளில் அதிகாலை 05.:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 07:25 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருதாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி,, சித்தூர்,, திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி,குண்டூர்,மிரியால்குடா, நலகொண்டா, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில், ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3, குளிர்சாதன அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், இரண்டு ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என மதுரை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story