தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்

தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்
X

ரயில் மாதிரி படம் 

தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் ஜூன் 21 முதல் இயக்கப்பட இருக்கிறது.

தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்

தற்போது தூத்துக்குடியிலிருந்து மதுரை, பெங்களூர் வழியாக மைசூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் ஜூன் 21 முதல் இயக்கப்பட இருக்கிறது.

வண்டி எண் 07235 பெங்களூரு - நாகர்கோயில் ஜூன் 21 முதலும் வண்டி எண் 07236 நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில் ஜூன் 22 முதலும் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும்.

நாகர்கோவில் சிறப்பு ரயில் பெங்களூரிலிருந்து மாலை 5 மணிக்கும், பெங்களூரு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து இரவு 07.10 க்கும் புறப்படும் என தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!