அசாம் நிலச்சரிவில் தமிழக வீரர் மரணம்- விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்படுகிறது.

அசாம் நிலச்சரிவில் தமிழக வீரர் மரணம்- விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்படுகிறது.
X
அசாமில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது

கொரோனா தொற்றின் பாதிப்பு தற்போது இந்தியாவில் குறைய தொடங்கியுள்ளது.தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இந்தியாவில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 136 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் மக்களை மீட்கும் பணிகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அசாமில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் தமிழகத்தின் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கதிர்வேல் என்பவர் மரணமடைந்துள்ளார். அவரது உடல் விமானம் மூலம் இன்று இரவு தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!