நெல்லை ஸ்மார்ட்சிட்டி கட்டுமானத்தின்போது ஆற்று மணல் கடத்தப்பட்ட விவகாரம்
மதுரை உயர் நீதிமன்றம் கிளை
நெல்லை ஸ்மார்ட் சிட்டி கட்டுமானத்தின்போது ரூ.100 கோடி மதிப்பிலான ஆற்று மணல் கடத்தப்பட்ட விவகாரம்-வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சியில் மத்திய அரசின் சீர்மிகு நகர் திட்டத்தின்( ஸ்மார்ட் சிட்டி) கீழ் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டங்களை கண்காணிப்பதற்காக மாநகராட்சி சார்பில் சீர்மிகு நகர் திட்ட தலைமை செயல் அதிகாரி பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியாக நாராயணன் நாயர் இருந்து வந்தார். இந்நிலையில், நாராயணன் நாயர் நேற்று தனது பணியை தற்போது திடீரென ராஜினாமா செய்தார்.
நெல்லை மாநகராட்சி ஆணையராக சில மாதங்களுக்கு முன்பு இளம் ஐஏஎஸ் அதிகாரி விஷ்ணு சந்திரன் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து சீர்மிகு நகர் திட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக நாள்தோறும் காலை 7 மணி முதலே நகரின் பல்வேறு இடங்களில் தனி ஆளாக ஆய்வுக்கு சென்று திட்டப் பணிகளை முடுக்கிவிட்டார்.
அதோடு திட்டம் தாமதமாவது ஏன் என்பது குறித்து சக அதிகாரிகளுடன் ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது அதற்கு திட்ட முதன்மை அதிகாரி நாராயணன் நாயர் தான் மூல காரணமாக செயல்பட்டதாகவும் தெரிகிறது.
குறிப்பாக நெல்லை பழைய பேருந்து நிலையம் சீரமைப்பு பணியின்போது பூமிக்கு அடியில் பலநூறு டன் ஆற்று மணல் கிடைத்தது. இதை முறைகேடாக மாநகராட்சி அதிகாரிகள் விற்பனை செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அப்போது நாராயண நாயர் தான் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார்.
இந்நிநிலையில் நெல்லை ஸ்மார்ட் சிட்டி கட்டுமானத்தின்போது ரூ.100 கோடி மதிப்பிலான ஆற்று மணல் கடத்தப்பட்ட விவகார வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu