இளைஞர்களுக்காக ரிவர்ஸ் மைக்ரேசன் திட்டம்-சரத்குமார்
இளைஞர்களுக்காக ரிவர்ஸ் மைக்ரேசன் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளோம் என மதுரையில் சரத்குமார் கூறினார்.
மதுரையில் மக்கள் நீதி மையம், இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வேட்பாளரான அழகரை ஆதரித்து செல்லூர் 60 அடி ரோட்டில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சரத்குமார் பேசியதாவது, அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும். பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் புதிய திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளோம். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவோம் என அறிவித்து இருக்கிறோம். கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்ற அடிப்படையில் படித்த இளைஞர்களை திறமைக்கேற்ற நல்ல வேலையில் அமர்த்தவும், கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய இளைஞர்களை அங்கேயே இருந்து விவசாயத்தை பார்க்க வேண்டும்.
அதேசமயம் அவர்கள் கற்ற கல்விக்கு ஏற்ற வேலையும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ரிவர்ஸ் மைக்ரேசன் என்ற புதிய திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். நகர்ப்புறத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள் தங்கள் சொந்த கிராமத்தில் விவசாயத்தை பார்க்கவும் அங்கிருந்து பல தொழில்களைச் செய்ய புதிய தொழில்களுக்கான கட்டுமான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளோம் என்றார்.
மேலும் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பும் பொழுது அருகில் இருந்த திருமண மண்டபத்தில் இருந்த புது மாப்பிள்ளை, மணப்பெண் இருவரும் வெளியில் வந்து சரத்குமாரை அழைத்துச் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களிடமும் தேர்தல் பரப்புரை செய்து நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu