பிரதமர் மோடி வருகை: மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் மோடி வருகை: மதுரையில் போக்குவரத்து மாற்றம்!
X
பிரதமா் நரேந்திர மோடி வருகையையொட்டி மதுரையில் இரண்டு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள்கள் பயணமாக தமிழகம் வருகிறார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.20 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து பிரதமா் தனி விமானத்தில் புறப்பட்டு, பிற்பகல் 2.05 மணிக்கு கோவை, சூலூா் விமானப் படை தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து, ஹெலிகாப்டரில் பிற்பகல் 2.40 மணிக்கு பல்லடம் வருகிறார்.

சாலை வழியாக பல்லடத்தில் உள்ள மாதப்பூருக்குச் செல்லும் அவா், 2.45 மணிக்கு ‘என் மண் என் மக்கள்’ நிகழ்ச்சி நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார். அங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் பிரதமா், மாலை 5 மணிக்கு மதுரைக்கு வருகிறார். மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரை வீரபாஞ்சானில் உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளியில் நடைபெறும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான எண்ம கருத்தரங்கில் கலந்துகொள்கிறார்.

பிரதமா் வருகையையொட்டி, ஏற்கெனவே, எஸ்பிஜி அதிகாரிகள் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா். மதுரை மாநகா் முழுவதும் 5 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, காவல் துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் திங்கள்கிழமை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமா் பயணிக்கும் வழிகள் உள்பட மதுரை மாவட்ட எல்லைக்குள் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சங்கீதா தெரிவித்தார்.

போக்குவரத்து மாற்றம்:

பிரதமா் வருகையையொட்டி, செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் வெளியூா்களிலிருந்து மதுரை வழியாகச் செல்லும் புறநகர் பேருந்துகள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • திருச்சியிலிருந்து மதுரை வழியாக சிவகங்கை, ராம்நாடு மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் மேலூர் ,திருவாதவூர் வழியாக பூவந்தி திருப்புவனம் முக்குளம்- காரியாபட்டி மார்க்கமாக அந்தந்த மாவட்டங்கள் சென்றடையும்.
  • திருச்சி இருந்து மதுரை வழியாக தேனி, திண்டுக்கல் ,விருதுநகர் செல்லும் வாகனங்கள் மேலூர், அழகர் கோவில் சாலை வழியாக அப்பன் திருப்பதி கடச்னேந்தல் மதுரை மாநகர் மார்க்கமாக நாகமலை புதுக்கோட்டை பிரிவு வழியாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.
  • திருச்சி இருந்து மதுரை வரும் வாகனங்கள் ஒத்தக்கடை நான்கு வழி சாலை சந்திப்பு வழியாக மாண்புமிகு உயர் நீதிமன்றம்- உத்தங்குடி- மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு- எம். ஜி. ஆர் பேருந்து நிலையம் (மாட்டுத்தாவணி) மார்க்கமாக வந்தடையும்.
  • திருச்சி இருந்து தூத்துக்குடி விருதுநகர் மற்றும் திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை நான்கு வழி சாலை சந்திப்பு வழியாக மதுரை மாநகர் நாகமலை புதுக்கோட்டை நான்கு வழி சாலை சந்திப்பு- செக்காணூரணி திருமங்கலம் மார்க்கமாக அந்தந்த மாவட்டங்கள் சென்றடையும்.
  • திருச்சி இருந்து சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை நான்கு வழி சாலை சந்திப்பு மற்றும் திருமோகூர் ரோடு சந்திப்பு வழியாக திருவாதவூர்- பூவந்தி மார்க்கமாக அந்தந்த மாவட்டங்கள் சென்றடையும்.
  • சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வானங்கள் பூவந்தி வழியாக திருவாதவூர் ஒத்தக்கடை மேலூர் மார்க்கமாக அந்தந்த மாவட்டங்கள் சென்றடையும்
  • சிவகங்கையில் இருந்து தூத்துக்குடி, விருதுநகர் திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் பூவந்தி வழியாக திருப்புவனம் -முக்குளம்- காரியாபட்டி மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்
  • சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் ராஜாக்கூர் சந்திப்பு வழியாக புது தாமரைப்பட்டி ஒத்தக்கடை மேலூர் மார்க்கமாக அந்தந்த மாவட்டங்கள் சென்றடையும்.
  • ராமநாதபுரத்திலிருந்து மதுரை திருச்சி செல்லும் வாகனங்கள் சக்குடி பாலம் வழியாக பூவந்தி, திருவாதவூர் ஒத்தக்கடை மார்க்கமாக அந்தந்த மாவட்டங்கள் சென்றடையும்.
  • ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் திருப்புவனம் நான்கு வழி சாலை வழியாக திருப்புவனம்- முக்களம்- காரியாபட்டி மார்க்கமாக மாவட்டத்தில் சென்றடையும்.
  • தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் A.மூக்குளம் சந்திப்பு வழியாக முக்குளம் திருப்புவனம்- பூவந்தி- ஒத்தக்கடை மேலூர் மார்க்கமாக அந்தந்த மாவட்டங்கள் சென்றடையும்.
  • தூத்துக்குடியில் இருந்து திண்டுக்கல் செல்ல வாகனங்கள் காரியாபட்டி சந்திப்பு வழியாக மருதங்குடி- கள்ளிக்குடி- சோழவந்தான் ரோடு சந்திப்பு செக்கானூரணி- சோழவந்தான் வாடிப்பட்டி மார்க்கமாக அந்தந்த மாவட்டங்கள் சென்றடையும்.
  • தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் சோளங்குருணிசந்திப்பு (வளையங்ககுளம்) வழியாக நெடுங்குளம்ரோடு- திருப்புவனம்- பூவந்தி திருவாதவூர்-மேலூர்- மார்க்கமாக அந்தந்த மாவட்டத்தில் சென்றடையும்.
  • திருநெல்வேலி மற்றும் விருதுநகரில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வானங்கள் திருமங்கலம் வழியாக சோழவந்தான் சாலை சந்திப்பு செக்கானூரணி நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து மார்க்கமாக அந்தந்த மாவட்டங்கள் சென்றடையும்
  • திருநெல்வேலி மற்றும் விருதுநகரில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் திருமங்கலம் வழியாக சோழவந்தான் சாலை சந்திப்பு செக்கானூரணி வாடிப்பட்டி மார்க்கமாக அந்தந்த மாவட்டங்கள் சென்றடையும்.
  • ராஜபாளையத்தில் இருந்து மதுரை, திருச்சி மற்றும் திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் T. கல்லுப்பட்டி வழியாக பேரையூர் உசிலம்பட்டி விருவீடு வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கும் உசிலம்பட்டிலிருந்து இருந்து செக்கானூரணி நாகமலை புதுக்கோட்டை மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.
  • தேனியில் இருந்து தூத்துக்குடி- திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் செக்கானூரணி தேவர் சிலை சந்திப்பு வழியாக திருமங்கலம் (சோழவந்தான் ரோடு) சந்திப்பு விருதுநகர் மார்க்கமாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்.
  • திண்டுக்கல் இருந்து தூத்துக்குடி- திருநெல்வேலி- விருதுநகர் செல்லும் வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டை நான்கு வழி சாலை சந்திப்பு வழியாக செக்கானூரணி தேவர் சிலை திருமங்கலம் (சோழவந்தான் ரோடு சந்திப்பு சந்திப்பு) மார்க்கமாக அந்தந்த மாவட்டங்கள் சென்றடையும்.

மேற்கொண்ட வாயில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்