எடப்பாடி பழனிச்சாமி தான் டாப் : செல்லூர் ராஜு

எடப்பாடி பழனிச்சாமி தான் டாப் : செல்லூர் ராஜு
X
தமிழகத்தின் ஹீரோ எடப்பாடி பழனிச்சாமி தான் டாப் மற்றவர்கள் எல்லாம் டூப் மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி.

மதுரையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி மதுரை பைபாஸ் ரோட்டில் நடைபெற்றது. நீர் மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்துவைத்தார். அங்கிருந்த பொதுமக்களுக்கும் நீர்மோர், தர்பூசணி, இளநீர் உள்ளிட்டவை வழங்கி இளநீர் பருகினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கோடை காலங்களில் அதிமுக சார்பில் நீர்மோர் வழங்குவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. கோவில்கள், நடை பாதையில் செல்லும் பொது மக்களுக்கும் நீர்மோர் வழங்கப்படுகிறது.

அதனடிப்படையில் இந்த ஆண்டும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உத்தரவின் பேரில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திமுகவின் ஹீரோ எடப்பாடி பழனிச்சாமி தான் மற்றவர்கள் எல்லாம் டூப்' அவர்தான் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களாலும் ஈர்க்கப்பட்டவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நல்லவர், வல்லவர், ராசியானவர். அவர் காலத்தில் தான் சரியான நேரத்தில் மழை பெய்து வருகிறது. இன்று வெயில் அடிக்கும் பொழுது கூட மழை பெய்து வருகிறது. அவர்தான் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்றார்.

Tags

Next Story