மதுரை,ராமநாதபுரம் பேராயரை சந்தித்து ப.சிதம்பரம் ஆதரவு கேட்டார்

மதுரை,ராமநாதபுரம் பேராயரை சந்தித்து ப.சிதம்பரம் ஆதரவு கேட்டார்
X
மதுரை ராமநாதபுரம் திருமண்டல பேராயர் ஜோசப்பை, முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் நேரில் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு கோரினார்.

நாட்டில் மதவாத சக்திகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதாகவும் இதை தடுக்கவும், ஜனநாயகத்தை நிலைநாட்டவும், நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு அளித்து வெற்றி பெற செய்தது போல்> தற்போதும் சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய ஆதரவு கோரினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேராயர் ஜோசப் நாட்டின் நலனுக்காக மதசார்பற்ற அரசியல் கட்சிகளை ஆதரிப்போம். மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறவர்களை சிறுபான்மையினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மதசார்பற்ற கூட்டணிக்கு தான் வாக்களிப்பார்கள் என்றும் தென்னிந்திய திருச்சபை நிர்வாகிகளன் முடிவு என்று தெரிவித்தார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்