இரவு ஊரடங்கு -வெறிச்சோடிய தூங்காநகரம்

இரவு ஊரடங்கு -வெறிச்சோடிய தூங்காநகரம்
X

தூங்காநகரமான மதுரையில் இரவு நேர ஊரடங்கு நேற்றிரவு முதல் அமல் ஆனது. இதனால் முக்கிய இடங்களில் வாகன சோதனை நடைபெற்றது.

தீவிரமாக பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக நேற்றிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இரவு நேர ஊரடங்கு காரணமாக தூங்கா நகரமான மதுரை ஆட்கள் யாரும் இன்றி ரோடுகள் வெறிச்சோடி கிடந்தது. மதுரையில் இரவில் பரவை காய்கறி மார்க்கெட், மாட்டுத்தாவணி பழ மார்கெட், பூ மார்க்கெட் உள்ளிட்டவை இரவு நேரங்களில் செயல்படுவது வழக்கம்.

இரவு நேர ஊரடங்கு காரணமாக இவைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து ரோடுகளும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. போக்குவரத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்