பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வை கண்டித்து SDPI கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வை கண்டித்து SDPI கண்டன ஆர்ப்பாட்டம்
X

 SDPI கண்டன ஆர்ப்பாட்டம்

நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு எட்டும் நிலையில் நடுத்தர மக்களுக்கு மக்களுக்கு மிகவும் கஷ்டப்படுவார்கள்.இதனை கண்டித்து நாடு முழுதும் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் எஸ்.டி.பிஐ கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். அதன்படி மதுரையில் நெல்பேட்டை பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான் அவர் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் முழக்கத்துடன் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆண்கள் பெண்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர்

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி