இந்திய வாலிபர் சங்கம் சார்பில் 80 ஆயிரம் முதல்வர் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இந்திய வாலிபர் சங்கம் சார்பில் 80 ஆயிரம் முதல்வர் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
X

இந்திய வாலிபர் சங்கம் 

உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி கடந்த ஜூன் 5 ஆம் தேதியன்று மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களிடம் மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் இந்திய வாலிபர் சங்கத்தினர் நேரடியாகச் சென்று அவர்களிடம் இருந்து தேவையற்ற பிளாஸ்டிக் மற்றும் புத்தகம், உலோக பொருட்களை பெற்று அதனை மறுசுழற்சிக்கு விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் நிதியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொரோனா நிவாரண நிதியாக வழங்க பொதுமக்களிடம் பெறப்பட்ட பொருள்களை விற்றதில் கிடைத்த ரூ80,005 -யை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகரிடம் வழங்கினர்.

தொடர்ந்து பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி தங்களால் இயன்ற உதவிகளை வழங்கியுள்ளனர் என்பது எங்களுக்கு பெரும் ஊக்குவிக்கும் விதமாகவே இருக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற சுற்றுசூழலை பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி