மதுரை மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கடும் வீழ்ச்சி

மதுரை மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கடும் வீழ்ச்சி
X

மதுரை மல்லிகை

மதுரை மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.120க்கு விற்பனையாகி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன்காரணமாக விவசாயிகளும் மல்லிகைப்பூ விற்பனையாளர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள ஒருங்கிணைந்த மலர் சந்தையில் மதுரை மல்லிகை உட்பட பல்வேறு மலர்கள் டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி வாடிப்பட்டி திருப்புவனம் காரியாபட்டி பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுரை மல்லிகை உற்பத்தி செய்யப்படுகிறது.

நாளொன்றுக்கு சராசரியாக 30 டன்னுக்கும் மேலாக மதுரை மலர் சந்தைக்கு மல்லிகை விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி பிற மாநிலங்களுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் மதுரை மல்லிகை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போதைய கரோனா கால ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு இன்றுமுதல் மலர் சந்தை திறக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 2 டன் மல்லிகை பூக்களே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றையும் மக்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டாத நிலையில் இன்று காலை ரூ.150க்கு தொடங்கி விற்பனை நேரம் செல்ல செல்ல ரூ.120 ஆக சரிந்து கடும் விலை வீழ்ச்சியை சந்தித்தது.

மதுரை மல்லிகை மட்டுமன்றி செவ்வந்தி, கேந்தி, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட மலர்களும் கிலோ ரூபாய் பத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவு போக்குவரத்து இன்மை போன்ற காரணங்களால் மல்லிகைப் பூக்களை பறிப்பது விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் செடியிலேயே பூக்கள் கருகும் அவலம் தொடர் நிகழ்வாக உள்ளது.

மதுரை மலர் சந்தையில் உள்ள சில்லறை பூக்கள் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக சுபநிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது மேலும் அனைத்து கோயில்களின் நடையும் சாத்தப்பட்டு இருப்பதால் பூக்களின் விற்பனை நடைபெறவில்லை. நேற்று கடை திறக்கப்பட்டு இருந்தாலும் பொதுமக்கள் பூக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால்தான் மதுரை மல்லிகையின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மல்லிகை சீசன் என்பதால் கிலோ ஒரு ரூபாய் 2500 வரை விற்பனையான நிலையில் தற்போது ரூபாய் 120 என சரிந்தது விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil